விளையாட்டு

அயர்லாந்து வீரர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தல்

(UTV | அடிலெய்டு) – 8-வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. ‘சூப்பர்-12’ சுற்றில் விளையாடும் 12 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டன.

சூப்பர்-12 சுற்றின் ஆட்டங்கள் 6ம் திகதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால் இதுவரை எந்த அணியும் அரை இறுதியை உறுதி செய்யவில்லை. குரூப்-1 பிரிவில் ஆப்கானிஸ்தானும், குரூப்-2 பிரிவில் நெதர்லாந்தும் வெளியேற்றப்பட்டுள்ளன. குரூப்-1 பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு அடிலெய்டில் தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின.

நியூசிலாந்து அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 5 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதியை உறுதி செய்து விடலாம் என்ற சூழலில் களம் இறங்கியது. மூன்று புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவில்லை) உள்ள அயர்லாந்து அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு முடிந்து போய்விட்டது.

டாஸ் ஜெயித்த அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்பிர்னி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பின் ஆலென், டிவான் கான்வே களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் குவித்தது. ஃபின் ஆலன் 32 ரன்னிலும் கான்வே 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். பிலிப்ஸ் 9 பந்தில் 17 ரன்னிலும் வில்லியம்சன் 35 பந்தில் 61 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்துவந்த நீசம், சட்னர் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். மிட்செல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் விளாசினார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

Related posts

உலகக் கிண்ணத் தொடரின் Plate Final ஆரம்பம்

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று!!

திமுத் மன்னிப்புக் கோருகிறார்