உள்நாடு

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு (DIG)கௌரவம் பெற்றார்

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

2024 ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று(28) காலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

இதன் போது அங்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீக்கு இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதன் போது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ. வாஹீட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது

கலைக்கப்பட்ட இடைக்கால குழு!

பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை [VIDEO]