உள்நாடு

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிரடி- பழுதடைந்த 84,875 கிலோ மல்லி களஞ்சியசாலைக்கு சீல் வைப்பு

(UTV | கொழும்பு) –

மனித பாவனைக்கு உதவாத மல்லியை  பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலை மீது  அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினர்  திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற  முறைப்பாட்டிற்கமைய அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன வழிகாட்டலில்   நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின்  புலன் விசாரணை அதிகாரிகளினால் கல்முனை-03   அம்மன் கோயில் வீதியில்  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த 84875 கிலோ  மல்லி மற்றும் 300 கிலோ நிறச்சாயம் (டை) என்பன   பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலையே இவ்வாறு     முற்றுகையிடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை(8) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே  மனித பாவனைக்கு உதவாத மல்லி நிறச்சாயம் இட்டு  விற்பனை செய்வதற்கு தயார் படுத்தபட்டு  களஞ்சிய அறையில் பதுக்கி வைத்திருந்த  மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்   44 வயது மதிக்கத்தக்க  சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு    குறித்த  களஞ்சியசாலை   பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்பட்டு  எச்சரிக்கையுடனான  அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழக்கு தாக்கல் நடவடிக்கையும்  முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையுடன் இணைந்து இச்சுற்றி வளைப்பில் திருக்கோவில்  விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வு பிரிவினரும் பங்கேற்றதுடன்   அம்பாறை மாவட்டத்தில்  இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத பொருட்களை களஞ்சியப்படுத்தும்  வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கெதிராக நீதவான் நீதிமன்றில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்துக்கமைய வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம், அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்வதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இவ் உர விற்பனை நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

(பாறுக் ஷிஹான்)

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு ELM முறை

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை