உள்நாடு

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

(UTV | கொழும்பு) –

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, டபிள்யூ. வீரசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் தலைமையிலும் இக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.முஷாரப், விமலவீர திஸாநாயக்க, திலக் ராஜபக்ஸ, மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டத்திலுள்ள திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது,மாவட்டத்தின் நகர அபிவிருத்தி, சுற்றுலாத்துறை மேம்படுத்தல், குடி நீர் சம்பந்தமான பிரச்சினைகள் இன்னும் முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமான விடயங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேற்படி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

       

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அஸ்வெசும தொடர்பில் புதிய அறிவிப்பு!

முதல் தொகுதி டீசல் இலங்கைக்கு

ஸ்டாலினுக்கு பிணை