உள்நாடு

அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக அப்துல் மனாப் தெரிவு

அப்துல் மனாப் கல்முனை “சனிமெளண்ட்” உதைபந்தாட்ட கழகத்தின் ஸ்தாபகரும்,
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முகாமைத்துவ சபையின் நிறைவேறுக் குழு உறுப்பினரும், கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசல் பொதுச் செயலாளராகவும் கடமைபுரிந்தார்.

கல்முனை அப்துல் மனாப், இலங்கை தேசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் உப-தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் என பொறுப்புக்களை வகித்துள்ளார்.

இளைஞர்களுக்கு மத்தியில் உதைபந்தாட்ட விளையாட்டை முன்நிலைப் படுத்தி,
மாவட்டம், தேசியம் என்ற ரீதியில் எமது மாவட்ட வீரர்களை உட்புகுத்தி, அவர்களுக்கான அங்கிகாரத்தையும் பெற்றுக் கொடுப்பதில் முதன்மையானவராக உழைத்தார்.

சமூகத்தில் அக்கறை கொண்டு, பொதுத்துறைகளிலும் தன்னை அர்ப்பனித்து இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் உழைத்த கல்முனையின் ஒரு அடையாளம் அப்துல் மனாப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ஜுனைதீன்

Related posts

அனுமதியின்றி சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது!

வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம்!

கொரோனா தாக்கத்தால் பாத்தேமேஹ் ரஹ்பர் உயிரிழப்பு