உள்நாடுபிராந்தியம்

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் படுகொலை

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இன்று (02) இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு சென்று அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஏனைய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

150 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கிய உலக வங்கி!

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்.

அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமாறு ஐ.நா குழு கோரிக்கை