அரசியல்உள்நாடு

அமைச்சுகளின் விடயதானங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 44 ஆம் பிரிவின் (01) உப சரத்தின் படி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் எண்ணிக்கை அதில் அமைச்சர்களுக்கான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

24 அமைச்சுப் பதவிகளுக்கான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் இந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா : மரணிக்கும் முஸ்லிம்களது உடல்களை கட்டாய தகனம் செய்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் [VIDEO]

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் அலட்சியம்

கடந்த 24 மணிநேரத்தில் 189 பேர் கைது