சூடான செய்திகள் 1

அமைச்சின் செயலாளர்களுக்கான அறிவிப்பு…

(UTV|COLOMBO)-அரச நிறுவனங்கள் , அரசியலமைப்பு வாரியம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்காக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படும் போது ஜனாதிபதி செயலாளர் வௌியிடும் சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுதல் அத்தியாவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ம் திகதி குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையை நியமிக்கும் போது தகுதிகளை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க கடந்த தினம் ஜனாதிபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதன்படி , தற்போது நியமிக்கப்பட்டுள்ள தலைவர்களின் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் தகுதிகளை ஆராய்வதற்காக குறித்த குழுவிடம் அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

 

 

 

 

Related posts

இன்று மீண்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் திறப்பு

வியாழேந்திரனின் கோட்டாவுக்கு ஆதரவு

30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து இலங்கை விலகிக் கொண்டுள்ளது