சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு கிடைத்த ஆண்டவனின் ஆறுதல் பரிசு!

(UTV|COLOMBO)-யதார்த்தபூர்வமான அமைச்சரவை மாற்றத்தில் அதிருப்தியுற்ற இலங்கை சீனி நிறுவனத்தின் (Lanka Sugar Company (Pvt) Limited) தொழிற் சங்கங்கள், கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் மீண்டும் சீனிக்கூட்டுத் தாபனத்தைக் கொண்டு வருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த ஆர்ப்பாட்டக் களம் அரசியல் களத்தை ஒரு கணம் சிந்திக்கத் தூண்டிவிட்டது. நாட்டின் வரலாற்றில் நடந்திராத இந்த ஆர்ப்பாட்டம் கட்சி பேதங்களின்றிய ஏற்பாடு. இதை எவரும் தூண்டி விடவில்லை என்பதுதான் இதற்குப் பொறுப்பான அமைச்சர் தேடிக்கொண்ட சத்திய வெற்றிக்குச் சான்று. அசத்தியம் அழிந்து சத்தியம் நிலைப்பதே தர்மத்தின் தத்துவத்தூது.

கற்புலனாகாத கதைகள், கட்டுக்கதை, போலி விமர்சனங்களைப் பொறுமையாக எதிர்கொண்ட அமைச்சர் ரிஷாத்தின் நேர்மைக்கு ஆண்டவன் கொடுத்த ஆறுதல் பரிசு இது. எதிரிகளின் நாவுகளுக்கு இந்த தொழிற் சங்கங்களின் போராட்டம் முடிச்சுப் போட்டிருக்கும். ஆனால், ஏனையோரின் சிந்தனைக்கு இது விருந்து சேர்த்திருக்கும். நேர்மையான அரசியல்வாதிக்குப் பின்னால் சேர்த்த கூட்டம் வாலாட்டாது. ஆனால் தானாக சேர்ந்த கூட்டம் நேர்மைக்காகத் தோள் கொடுக்கும். இதுதான் இந்த ஆர்ப்பாட்டத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது. இல்லாவிடின் ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி மற்றும் சீனி நிறுவனத்தின் அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்றித்துத் தோள் கொடுத்திருக்காது. அதிலும் இந்த நிறுவனம் தற்போது ஐ.தே.க அமைச்சரின் கீழ் உள்ள நிலையிலேயே, இந்த ஆர்ப்பாட்டம் அரங்கேறியது. இந்த ஆதங்கம் திட்டமிட்ட ஏற்பாடில்லை என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி.

சம்பளப் பிரச்சினையில்கூட ஒரு நிறுவனத்தின் சகல சங்கங்களையும் ஒன்றிணைக்க முடியாது. ஆனால், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிர்வாகத்தின் கீழ் தாங்கள் நிர்வகிக்கப்பட வேண்டுமென்பதில் சீனி நிறுவனத்தின் சங்கங்கள் ஒன்றித்தன, சிந்தித்தன. ஏன்? இதற்கான காரணத்தைக் கண்டறிவதில் சகலருக்கும் கடப்பாடிருக்கிறது. ஊழியர் மத்தியில் இந்த உயர்ந்த நம்பிக்கையை அமைச்சர் ரிஷாட் எவ்வாறு உழைத்துக் கொண்டார் என்ற ஆராய்ச்சி, பலரையும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

மேலும், சீனி நிறுவனம் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் வருவதே ஜனாதிபதியின் விஞ்ஞான பூர்வமான அமைச்சரவை மாற்றத்தை அர்த்தமாக்குமென ஒன்றித்து, அடம்பிடிக்கின்றன இச்சங்கங்கள் .

 

இதோ வாசகர்களின் மனக்கண் முன் இச் சங்கங்களின் மனச்சாட்சிகள் திரையிடப்படுகின்றன. நல்லாட்சி அரசின் நூறு நாள் திட்டத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல சீனி நிறுவனத்தைப் பொறுப்பேற்ற போது ரூபா 1000 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், எமது பிள்ளைகளின் வாழ்வில் கஷ்டம் ஏற்பட்டது. உழைப்புக்கேற்ற விலையின்றி ஊழியர்கள் விரக்தியின் விளிம்பில் தற்கொலை செய்யக் காத்திருந்தனர். இந்நிலையில் 2016ஆம் ஆண்டு அமைச்சர் ரிஷாட் பொறுப்பேற்று பொறுப்புடனும், விழிப்புடனும் செயற்பட்டார். இதனால் ரூபா 1000 மில்லியனை இலாபமாக ஈட்டினார். எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன. இந்தச் சாதனைத் தொடரில் 2017 இல் ரூபா 1300 மில்லியன் இலாபமீட்டி சீனிக்கூட்டுத் தாபனத்தின் நிலையான வைப்பிலிட்டதுடன், ஊழியர்களின் உழைப்புக்கும் உபகாரம் சேர்த்தார்.

வரப்புயர நீருயரும்

நீருயர நெல்லுயரும்

நெல்லுயரக் குடியுயரும்

குடியுயரக் கோனுயர்வான். காட்சிகளின் முடிவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நேர்மை, வீரம் குணங்களுயர்ந்தன. ஆனால்…… எதிரிகளின் மனங்கள் மட்டும்……… ???

 

 

 

-A.G.M.தௌபீக்-

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தனது அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை-விவசாய அமைச்சு