அரசியல்உள்நாடு

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டீனர் இடையிலான சந்திப்பு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் , இலங்கைக்கான நோர்வே தூதுவர் திருமதி மே-எலின் ஸ்டெனருடன் டிசம்பர் 20ம் திகதி அமைச்சகத்தில் பயனுள்ள சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார் . இந்த கலந்துரையாடலின் போது கடற்றொழில் துறையில் இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான வலுவான வரலாற்று உறவுகளை பற்றி முன்னிலைப்படுத்தப்பட்டதோடு , நிலையான அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்தும் பற்றியும் வலியுறுத்தப்பட்டது .

இந்த சந்திப்பின் போது, ​​அவர்கள் , அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு , மிகவும் அழகான யாழ்ப்பாண பிரதேசத்தில் பாரம்பரியமான முறையில் தயார் செய்யப்பட்ட சுவை மிக்க நண்டு கறியை ருசித்த தங்கள் அனுபவத்தை பற்றியும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.

மேலும் படகு மற்றும் கடல் உபகரண உற்பத்தியில் ஒரு முன்னோடி அரசு நிறுவனமாக 1967 இல் நிறுவப்பட்ட Cey-Nor Foundation Limited இன் முக்கிய பங்கு உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை அமைச்சர் நினைவுகூர்ந்தார் .நோர்வேயின் அரசு சார்பற்ற அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இதன்போது இலங்கையின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவது குறித்தும், குளிர்பதன அறைகளின் வசதிகள், திறன் மேம்பாடு மற்றும் மீன்வளத் துறையில் உற்பத்தித்திறனையும் மதிப்பையும் அதிகரிக்க இலங்கையின் பதப்படுத்தல் வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது . கடற்றொழில் துறையில் உறவுகளை வலுப்படுத்தவும் நிலையான முன்னேற்றங்களைத் தொடரவும் இரு தரப்பும் தமது கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மேலும், அமைச்சர் சந்திரசேகர் அவர்கள், நோர்வேயில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை யாழ்ப்பாணத்தின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க சிறப்பு அழைப்பையும் விடுத்திருந்ததோடு பிராந்திய வளர்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதில் சமூகத்தின் முயற்சிகளின் பங்களிப்பையும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் Johan Bjerkem. கடற்றொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பி.கே. கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடகப்பிரிவு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு

Related posts

சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணி இன்று

IMF உடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் : நாளை பிரதமர் விசேட உரை

சிறுபான்மை சமூகத்துக்காக குரல்கொடுப்போரை வீழ்த்த சூழ்ச்சி – ரிஷாத்