அரசியல்உள்நாடு

அமைச்சர் பிமல் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இடையே சந்திப்பு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இரு தரப்புக்கும் இடையிலான கலந்துரையாடலில், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும், அண்டை நாடான இலங்கையுடன் வலுவான, நீண்ட கால உறவைப் பேணுவதற்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

பாடசாலை சேவை வாகனங்களை மேற்பார்வை செய்ய நடவடிக்கை!

“இப்போதைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றி தெரியாது” டயான கமகே எம்பி உரை

பல்கலைக்கழகங்கள் முழுமையாக ஆரம்பிக்கப்படுமா?