உள்நாடுசூடான செய்திகள் 1

அமைச்சர் நஸீர் பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம் !

(UTV | கொழும்பு) –

சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்  பயணித்த ஹெலிக்கொப்டர்  கடும் மழை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை திடீரென தரையிறக்கப்பட்டது.

பலத்த மழை காரணமாக  கொத்மலை சுற்றுவட்டாரப் பகுதியில் தரையிறங்கியதாகவும் அமைச்சரும் விமானியும் சுமார் 45 நிமிடங்கள் மைதானத்தில் தங்கியிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மழையுடனான காலநிலை தணிந்ததையடுத்து, நுவரெலியாவிலிருந்து பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் ஏற்றிக்கொண்டு ஹெலிக்கொப்டர்  மட்டக்களப்புக்கு புறப்பட்டுச் சென்றதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸி அணியினர்

இறப்பர் மரக்கன்றுகளை நாடு தழுவிய ரீதியில் நடுவதற்கான வேலைத்திட்டம்

இலங்கையின் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!