உள்நாடு

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (29.02.2024) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும், சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

மலையக மறுமலர்ச்சிக்காக இந்தியா வழங்கி வரும் அபிவிருத்திசார் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையக மாணவர்களுக்கு இந்தியா வழங்கிவரும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அதேவேளை இலங்கை, இந்தியாவுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதில் மலையக மக்களுக்குரிய வகிபாகம் பற்றியும் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக பாரத் – லங்கா வீட்டு திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

 

Related posts

ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு

editor

IMF தகவல் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும்

சிறைக்கைதிகள் 228 பேர் விடுதலை