சூடான செய்திகள் 1

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் மெய்ப்பாதுகாவலர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பெட்ரோலிய வள கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் மெய்ப்பாதுகாவலர் எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர் இன்று(11) முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 28ம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

2015 ஜனவரி 8 மக்கள் ஆணையின்படி அரச பயணம் தொடரும் – பிரதமர்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 584 ஆக உயர்வு [UPDATE]

முஸ்லிம் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது – கோட்டாபய