சூடான செய்திகள் 1

அமைச்சர்கள் முன்வைக்கும் அமைச்சரவை பத்திரங்களை ஆய்வு செய்ய விசேட குழு

(UTV|COLOMBO)-அமைச்சர்கள் முன்வைக்கும் அமைச்சரவை பத்திரங்கள், அமைச்சரவையில் கலந்துரையாடப்படுவதற்கு முன்னர் ஆய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆளும்தரப்பு தலைவர்களால் உருவாக்கப்படவுள்ள குறித்த குழுவில் தலைமை அதிகாரியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்தியவாசிய அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக அமுல்படுத்துவது மற்றும் ஜனாதிபதியுடன் ஏற்படக்கூடிய மோதல்களை தடுப்பதும் இந்த குழுவை நியமிப்பதற்கான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய அமைச்சரவையின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை மறுதினம்(02) காலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஐந்தாம் தர புலமைபரீட்சையில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தினை பெற்ற மாணவர்கள்…

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது

கேரளா கஞ்சாவுடன் பெண் கைது