சூடான செய்திகள் 1

அமைச்சரவை மாற்றம் என்றதும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அமைச்சு மாற்றம் என கோஷமிடும் மு.கா வின் பக்தர்கள் !!!

(UTV|COLOMBO)-இந்த நல்லாட்சி அரசில் இன்றுடன் நான்கு முறை அமைச்சரவை மாற்றம் நடந்துவிட்டது. இந்த நான்கு முறையிலும் மு.கா வின் ஆதரவாளர்கள் அதிக நேரத்தையும் தங்களுக்கு உரித்தான எதிர்ப்பு அரசியலையும் பயன்படுத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அமைச்சு மாறுகிறது என கோஷமிட்டனர். சமுகவலைத்தளங்களில் பதிவிட்டனர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த ஒன்றும் நடந்தாக இல்லை.

காகம் திட்டி மாடு சாகாது. என்பது போல் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது இவர்கள் என்ன கோஷமிட்டாலும் அபாண்டம் சுமத்தினாலும் மக்களுக்கு தெரியும் உண்மை நிலை இவர்களின் இந்த எதிர்ப்பு எதிர்பார்ப்பு ஒன்றும் நிறைவேறாது……
இவர்களுக்கு என்ன பிரச்சினை எதில் பிரச்சினை அமைச்சரிடம் அல்லது அமைச்சிலா என்று தேடிப்பார்த்தால் இரண்டிலும் தான் பிரச்சினையாம். அமைச்சர் றிஷாட் பதியுதீன் இந்த அமைச்சில் மூலம் பல வேலைத்திட்டங்களை செய்து வருகிறார். வேலைகளை வழங்குகிறார் இது தான் பிரச்சினை இந்த மு.கா வின் பக்தர்களுக்கு.
அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இருக்கும் இந்த வர்த்தக கைத்தொழில் அமைச்சை அமைச்சர் ஹக்கீமிடம் இருபது வருடம் கொடுத்து வைத்தாலும் எதையும் செய்யாமல் அப்படியே திருப்பி கொடுப்பர் அவருக்கு அணைக்க தெரிந்த அளவு சேவை செய்ய தெரியவில்லை என்பது தான்  உண்மை….
அமைச்சர் ஹக்கீம் இதுவரை எத்துணை அமைச்சுக்களை வைத்திருந்தார் அந்த அமைச்சுக்கள் மூலம் இதுவரை அவர் செய்த சேவைகள் வேலைவாய்ப்புக்கள் எண்ணி சொல்ல முடியுமா இப்படி எதையும் செய்யாமல் வருகின்ற நிதியெல்லாம் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பும் திறமையும் சாணக்கியத்துக்கு உள்ளது.
 ஆனால் சேவை செய்யும் திறனும் திறமையும் உள்ள அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எந்த அமைச்சை கொடுத்தாலும் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர் கடந்த காலா வரலாறுகளும் தெரிந்திருக்கும்…
அமைச்சரவை மாற்றம் என்றால் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு மாற்றம் போல் காட்டும் மு.கா தலைவரின் பக்தர்கள் கோஷமிட்டுக்கொண்டும் முகநூலில் பதிவிட்டுக்கொண்டும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது அபாண்டத்தை பரப்பிக்கொண்டு இருப்பதனால் பலன் ஏதும் இல்லை……
எ.எம்.றிசாத்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இலங்கை – நியூசிலாந்து போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்

புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து ஒருவர் தற்கொலை

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று