உள்நாடு

அமைச்சரவையில் இன்று 21வது திருத்தம்

(UTV | கொழும்பு) – இந்த வார அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (06) பிற்பகல் நடைபெறவுள்ளது.

இன்று அமைச்சரவையில் பல விசேட பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதுடன், அதில் முக்கியமானது அரசியலமைப்பின் 21வது திருத்தமாகும்.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த வரைவை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

மேலும், மின்சாரக் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவு மற்றும் விவசாயம் செய்யாமல் விடப்பட்டுள்ள தனியார் காணிகளை விவசாயிகளுக்கு கையளிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

விவசாய அமைச்சகம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக கையளிப்பதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு இன்று முதல் அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

Related posts

கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் இழுவை படகு கவிழ்ந்த சம்பவம் குறித்து ரிஷாத் சபையில் கவலை [VIDEO]

யாழில் பயிர்களிடையே அதிகரித்த பூச்சித்தாக்கம்!

நாடளாவிய ரீதியில் மூடப்படும் 20 வைத்தியசாலைகள்!