உள்நாடு

அமைச்சரவையின் தீர்மானத்திலேயே எமது தீர்மானம் தங்கியுள்ளது

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக தாங்கள் முன்னெடுக்கின்ற இணைய வழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படும் என ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் தீர்வின் அடிப்படையிலேயே தீர்மானம் தங்கியுள்ளது என்றும் அந்த சங்கங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்து செய்தல் மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்தும் 22 நாட்களாக ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணித்து போராட்டத்தை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காணி அளவீடு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளைய தினம் திறக்கப்படும்

எரிபொருள் விலையை திருத்தம் செய்ய இணக்கம்