சூடான செய்திகள் 1

அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை எடுத்து வருவது தடை

(UTV|COLOMBO) அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் அமைச்சர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நேற்று  ஜனாதிபதி செயலகத்தில்நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சில அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தின் போது தொலைபேசி அழைப்புக்களை எடுப்பது மற்றும் அழைப்புக்களுக்குப் பதிலளிப்பது போன்ற காரணத்துக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

எதிர்வரும் 05ம் திகதி வரை அமித் வீரசிங்க விளக்கமறியலில்…

அனைத்து மாவட்டங்களதும் இறுதி முடிவுகள்

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை