வகைப்படுத்தப்படாத

அமேசன் காட்டில் பயங்கர தீ – பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பு தீக்கிரை

(UTVNEWS|COLOMBO) – அமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் எரிந்து நாசம் ஆகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமேசன் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியதை தொடர்ந்து சில தினங்களாக தீ பற்றி எரிந்து காடு முழுவதும் பரவி வருகிறது.

இதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருவதுடன் இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அமேசன் காடுகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள் தான் வேண்டுமென்றே தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளன என பிரேசில் அதிபர் ஜேய்ர் போல்சனோரோ தெரிவித்துள்ளார்.

Related posts

පැපුවා නිව්ගිනියාවේ මිනිස් සංහාරයක්

යාපනයේ කිතුණු දේවස්ථානයක සුරුවමක් කඩා දමයි

Change of portfolios of two Ministries