அமெரிக்கா விதித்துள்ள 44 சதவீத வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல.
இது ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பாகும். எனவே, தற்போதைய அரசாங்கம் சர்வத்துடனான தொடர்புகள் குறித்த தமது பழைய மரபுகளை இப்போதாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
ஆசியாவை மையமாகக் கொண்ட வர்த்தக உத்திகளைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.