உலகம்

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்

(UTV |  வொஷிங்டன்) – அமெரிக்காவின் 39-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜிம்மி கார்ட்டர் (jimmy carter). இவர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க ஜனாதிபதியாக செயல்பட்டார். இந்த காலகட்டத்தில் 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் 42-வது துணை ஜனாதிபதியாக செயல்பட்டவர் வால்டர் மண்டிலி.

மேலும், பில் கிளிங்டன் ஜனாதிபதியாக இருந்தபோது 1993 முதல் 1996 வரை வால்டர் மண்டிலி ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகவும் செயல்பட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக அவர் அரசியலை விட்டு கடந்த ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்தார்.

இந்நிலையில், 93 வயதான வால்டர் மண்டிலி இன்று உயிரிழந்தார். வால்டர் மண்டிலி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.

முன்னாள் துணை ஜனாதிபதி வால்டர் மண்டிலி உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு அவருடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வால்டர் மண்டிலி மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

அணுசக்தி குறித்த எந்த வரம்பையும் பின்பற்றப்போவதில்லை – ஈரான்

கொவிட் – 19 : பரவும் வேகம் குறைவு

ஈரான் செல்லும் அலி சப்ரி!