உலகம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஏஞ்சல் யுரேனா டுவிட்டர் பதிவில்,

“அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருக்கு வழங்கப்படும் சிறந்த கவனிப்பு குறித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார” என பதிவிட்டுள்ளார்.

பில் கிளிண்டன் திங்கட்கிழமை மாலை வொஷிங்டனில் உள்ள ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பில் கிளிண்டன் 42 ஆவது ஜனாதிபதியாக 1993 முதல் 2001 வரை வெள்ளை மாளிகையில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரைன் தூதரகத்தில் குண்டு வெடிப்பு !

கொரோனா காரணமாக 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு

சவுதி அரேபிய மன்னர் மருத்துவமனையில் அனுமதி