வகைப்படுத்தப்படாத

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா

(UTV|AMERICA)-அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம் என் மெட்டிஸ், தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜேம் என் மெட்டிஸ் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கையளித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

எனினும் மெட்டிஸ், எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதவியிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி, டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2 வருடங்களாக தமது நிர்வாகத்தில் சிறந்த சேவையை ஆற்றியுள்ளதாகவும், ட்ரம்ப், தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவிலிருந்து அமெரிக்க இராணுவத்தை மீளப்பெறுவதாக டொனால்ட் ட்ரம்ப், நேற்று முன்தினம் அறிவித்ததை அடுத்தே, மெட்டிஸ், தமது இராஜிநாமா குறித்து அறிவித்துள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப செயற்படும் பாதுகாப்பு செயலாளரை நியமிப்பதற்கு, ஜனாதிபதிக்கு உரிமை உள்ளது என, ஜிம் மெட்டிஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

නේපාලයට ඇතිවූ ජල ගැලීම් වලින් 47 ක් මියගොස් 29 ක් අතුරුදන් වෙයි

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு

Heavy traffic near Nelum Pokuna, Green Path