வகைப்படுத்தப்படாத

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் மாற்றம்

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் மெக்மாஸ்ட்டரை பதவி நீக்கியுள்ளார்.

அவருக்கு பதிலாக ஜோன் பொல்ட்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொனால்ட் ட்ரம்ப் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பொல்டன் எதிர்வரும் 4ம் திகதி முதல் இந்த பதவியை ஏற்றுக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் பதவியில் இருந்து ரெக்ஸ் தில்லர்சனை நீக்கிய ட்ரம்ப், அவருக்கு பதிலாக சீ.ஐ.ஏயின் முன்னாள் பணிப்பாளர் மைக் பொம்பேயை நியமித்தார்.

தற்போது பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14 மாதங்களில் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படும் மூன்றாவது நபராக பொல்டன் உள்ளார்.

69 வயதான பொல்டன், முன்னாள் ஜனாதிபதிகளான ரொனால்ட் ரீகன், ஜோர்ஜ் எச்.டபிள்யு. புஸ் மற்றும் ஜோர்ஜ் டபிள்யு புஸ் ஆகியோரின் நிர்வாகத்தில் இணைந்து பணியாற்றியவராவார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ශ්‍රී ලංකාව හා බ්‍රිතාන්‍ය ප්‍රථම වරට යුධ අභ්‍යාසයක

நீடிக்கும் வௌ்ள அபாய எச்சரிகை!

Louis Tomlinson shuts down reports on One Direction split