சூடான செய்திகள் 1வணிகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது.

அதன்படி இன்று (02) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.90 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 176.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய காலமாக தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இன்று அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

அரசியல் அமைதியின்மை எதிர்வரும் வாரம் முழுமையாக நிறைவுக்கு கொண்டு வரப்படும்

சவூதி அரேபியா செல்லும் அலி சப்ரி!

பிரதமர் நாடு திரும்பினார்…