கிசு கிசு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி?

(UTV|AMERICA)-நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ் சினிமாவில் மட்டும் தான் நடக்கிறது என்று யாரேனும் நினைத்திருந்தால் அதை மாற்றும் வகையிலும், தற்போது ஹாலிவுட்டிலும் அப்படித்தான் என நிரூபிக்கும் வகையில் ஒரு செய்தி வந்துள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சமீபத்தில் ‘பிபிசி’க்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் அரசியலில் குதிப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “இந்த கேள்வியை 20 வருடங்கள் முன்பு கேட்டிருந்தால் நான் சிரித்திருப்பேன். தெரியவில்லை. எந்த இடத்தில் அதிகம் தேவையோ அந்த இடத்தில் நான் அதிகம் இருக்க விரும்புவேன்,” என கூறினார்.

“2020 தேர்தலுக்கு ஜனநாயக கட்சியில் ஜனாதிபதி போட்டிக்கு 30 முதல் 40 பேர் போட்டியில் இருக்கலாம், அதில் உங்கள் பெயரையும் சேர்த்துவிடலாம்” என தொகுப்பாளர் கூறியபோது, ஏஞ்சலீனா “நன்றி” என மட்டும் கூறினார்.

அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதால் நிச்சயம் அவர் கூடிய விரைவில் அரசியல் இறங்குவார் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

 

 

 

 

 

Related posts

கோத்தா பக்கம் சாயும் சந்திரிக்கா

ரஞ்சனுக்கு ஜம்பர்.. வெளி உணவுக்கு தடை.. வெளியாட்களை பார்க்க தடை

நாடு இருளில் மூழ்கக் காரணம் இதுதானாம்