உள்நாடு

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளருக்கும் – செந்தில் தொண்டமானுக்கும் இடையில் கலந்துரையாடல்.

(UTV | கொழும்பு) –

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளர் டேவிட் கெரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை திருகோணணலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக நேற்று சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இச்சந்திப்பில் சமய நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரின் மத உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் தூதுவர் ஸ்டீபன் ஸ்னெக், தூதுவர் ஜேமி ஸ்டாலி, கண்காணிப்பு கொள்கை ஆலோசகர் செமா ஹசன், கொள்கை ஆய்வாளர் ரூபி உட்சைட், அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஷந்தீப் குரூஸ், அமெரிக்கா கொழும்பு தூதரகத்தின் அரசியல் நிபுணர் ஆகியோரம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

   

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீராவியடி விகாரையில் கடமையாற்றிய நபர் அகால மரணம்

பிரச்சார பணிகளுக்கு சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

மீண்டும் நாட்டில் டெங்கு பரவும் அபாயம்!