உலகம்

அமெரிக்க எல்லையை மூடிய மெக்ஸிகோ

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்படாத அமெரிக்கர்கள் மூலம் தங்களுக்கு அந்த தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அமெரிக்காவுடனான எல்லையை மெக்ஸிகோ போராட்டக்காரர்கள் மூடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள மெக்ஸிகோ உடனான எல்லைப்பகுதியில் இந்த சம்பவம் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.

மெக்ஸிகோவில் இதுவரை 475 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவிலோ உலகிலேயே அதிகபட்சமாக 83,836 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு சுட்டிக்காட்டுகிறது.

இரு நாடுகளுக்கிடையேயான எல்லையில் இன்றியமையாத சேவைகளை தவிர்த்த ஏனைய போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு நோய்த்தொற்று பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்று மெக்ஸிகோ போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Related posts

ஈக்வடோர் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக் கொலை!

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா

பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி