உள்நாடு

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் ஜனாதிபதியினை சந்தித்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (27) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.

ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் றொபர்ட் கப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளர் கெல்லி கியர்லீன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோர் அவர்களாவர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக் குழுவினர், இலங்கை அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அண்மையில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவுவதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

Related posts

இலங்கைக்கு இந்தியா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்போம் – அநுர

editor

தனியார் பேருந்துகளின் பயண தடவைகளை குறைக்கத் தீர்மானம்