வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

(UTV|AMERICA)-அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஒரு வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவின் டென்னிசி நகருக்கு உட்பட்ட நாஷ்வில்லே பகுதியில் ஆப்ரி மில்ஸ் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் வாலிபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வணிக வளாகத்தை விட்டு வெளியேறினர். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் உடனடியாக போலீசில் சரணடைந்தார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நபர் மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், இருவரும் சுமார் 22 வயது மதிக்கத்தவர்கள் எனவும், இரு வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி

தேர்தலை பிற்படுத்த அலரி மாளிகையில் கலந்துரையாடல்

கடும் மின்னல் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!