வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு

(UTV|AMERICA) அமெரிக்காவின் வேர்ஜினியா பிராந்தியத்தில் உள்ள அரசாங்க கட்டடமொன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் பிற்பகல் 4 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி தாக்குதலை மேற்கொண்ட துப்பாக்கிதாரி, வேர்ஜினியா நகராட்சி மையத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வருபவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலின்போது காவல்துறையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுள்ளார். அவரின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை.

அதேநேரம் ,தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது

680 மில்லியன் டொலர் ஊழல்

ශිෂ්‍යත්ව අරමුදලක් ස්ථාපිත කිරීමේ යෝජනාවට කැබිනට් අනුමැතිය