உலகம்

அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 

(UTV|கொவிட்-19)- அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போது உலகின் 212 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்றால், 1,507,798 பாதிக்கப்பட்டுள்ளதுடன், 90, 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,744,516 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடமும், ரஷ்யா இரண்டாவது இடமும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ்

‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று வெடிப்பு