வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து

(UTV|AMERICA)-அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வடக்கு பாஸ்டனுக்கு அருகே 27 கி.மீ. தொலைவில் உள்ள லாரன்ஸ், அன்டோவர், மற்றும் வடக்கு அன்டோவர் ஆகிய 3 நகரங்களில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்தது.

இதனால் வாயு கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கும் பரவியது. அதை தொடர்ந்து எரிவாயு குழாய் வெடித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இருந்தாலும் வாயு கசிவு தொடர்கிறது. எனவே அந்த பகுதியில் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புகை மூட்டம் மற்றும் தீயில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

SLPP signs MoU with 10 political parties

වැස්සේ අඩු වීමක්

மேலும் கால அவகாசம் வழங்கியுள்ள சவுதி