உலகம்

அமெரிக்காவில் 2 இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,097,937 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 205,471 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787,504 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இலங்கை ஆயிஷா, பிரித்தானியாவில் நீதிபதியாக நியமனம்

ரஷ்யா விமானங்கள அமெரிக்கா வான்பரப்பில் பறக்கத் தடை

கொரோனா : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு