உலகம்

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

(UTV |  வொஷிங்டன்) – உலக அளவில் கொரோனா வைரசால் கடும் பாதிப்புக்கு உள்ளான நாடு அமெரிக்கா. அங்கு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா உறுதி பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 16,799- ஆக உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.67 லட்சமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அதிபர் ஜோ பைடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று முதல் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் ஆவர். தடுப்பூசி முற்றிலும் இலவசம் மற்றும் பாதுகாப்பானது. பெருந்தொற்றை நாம் இப்படித்தான் முடிவுக்க்கு கொண்டு வரப்போகிறோம். தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்.16-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்”என பதிவிட்டுள்ளார்.

 

Related posts

ஒமைக்ரொனின் தீவிரம் குறித்து WHO எச்சரிக்கை

 நடாசாவை கைது செய்ய முடியுமென்றால் ஏன் ஞானசாரவை கைது செய்ய முடியாது? சந்திரிகா

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை