உலகம்

அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடையாது – டொனால்ட் டிரம்ப் முடிவு

அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அரசியலமைப் பின் 14-வது ஷரத்தின் படி, பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல், அதன் எல்லைக்குள் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குகிறது. கடந்த 150 ஆண்டு கால சட்டத்தை மாற்றிமைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், இச்சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இச்சட்ட ஏற்பாடு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. அமெரிக்க குடிமகனாக மாறுவதற்கு கடுமையான தரநிலைகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதம்

20 ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்க உள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகப் பதவியேற்கவிருக்கும் இவர் இப்பதவிக் காலத்தில் முன்னெடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related posts

ஊடுருவலாளர்களால் முடக்கப்பட்ட மோடியின் டுவிட்டர்

டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பொலிஸ் தீவிர சோதனை

editor

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை – ரஷ்ய ஜனாதிபதி புடின்

editor