வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் பறந்து வந்த எரிமலை குழம்பு படகை தாக்கியது

(UTV|AMERICA)-அமெரிக்காவின் ஹவாய் தீவு சர்வதேச சுற்றுலா தலமாகும். ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள நிலையில் அங்குள்ள கிலாயூ என்ற எரிமலை கடந்த மே மாதம் வெடித்தது.

அதில் இருந்து கியாஸ், பாறைகள், குழம்பு வெளியேறிக்கொண்டிருக்கிறது. அதை கண்டுகொள்ளாமல் அங்குள்ள சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அங்குள்ள கடலில் பலர் படகு பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது கிலாயூ எரிமலையில் இருந்து குழம்பும், உருகிய பாறையும் பறந்து வந்து படகு மீது விழுந்து தாக்கியது.

இதனால் படகின் மேற்கூரை சேதமடைந்தது. மேலும் எரிமலை குழம்பு மற்றும் பாறைகள் தாக்கியதில் படகில் பயணம் செய்த 23 பேர் தீக்காயம் அடைந்தனர்.

அவர்களில் ஒருவரது கால் எலும்பு முறிந்தது. காயம் அடைந்த அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

සාමය සමගිය සහ සහජීවනය සඳහා වූ ජාතික සමුළුව අද කොළඹදී

Sri Lanka likely to receive light rain today

සිංගප්පූරුව පරදා ශ්‍රී ලංකා දැල් පන්දු කණ්ඩායම ජයගනී