உலகம்சூடான செய்திகள் 1தொழிநுட்பம்

அமெரிக்காவில் நாளை முதல் டிக்டொக் செயலிக்கு தடை

அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டிக்டொக் செயலி நாளை (19) முதல் தடை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘டிக் டொக்’ எனப்படும் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. சீனாவைச் சேர்ந்த ‘பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்தச் செயலியை நிர்வகித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அரசாங்கம் டிக்டொக் பாவனைக்குத் தடை விதித்தது.அதைத்தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் டிக்டொக் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடை இந்த வார இறுதியில் அமுலுக்கு வருகிறது. டிக்டொக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் மட்டுமே தடை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்போவதில்லை என்று பைட்டான்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 17 கோடி பேர் டிக்டொக் செயலியில் கணக்கு வைத்துள்ளனர் என பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைட்டான்ஸ் நிறுவனத்தின் வாதத்தை நிராகரித்து, மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டிக்டொக் செயலி நாளை(19) முதல் தடை செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள்காட்டி ஜோ பைடன் சட்டம் இயற்றியுள்ளார்.

டிக்டொக் செயலியைத் தடை செய்வது அல்லது அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் சட்டம் இயற்றவேண்டும்.

அமெரிக்க நிறுவனத்திடம் டிக்டொக் செயலியை விற்பனை செய்யாவிட்டால் பிளே ஸ்டோரில் (Play store) இருந்து செயலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பில் பலத்த காற்று: சாரிதிகள் மற்றும் பயணிகளுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி – திங்கட்கிழமை நாட்டை வந்தடையும்

editor

புளூமென்டல் சங்க கைது