உலகம்

அமெரிக்காவில் ட்ரெண்டிங் ஆகும் ‘சித்தி’

(UTV | அமெரிக்கா) – அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறிப்பாக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கமலா ஹாரிஸ் உறவினர்கள் சென்னையில் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளரான ஜோபிடன் தனது முதல் உரையை அமெரிக்காவில் நேற்று தொடங்கினார். அப்போது பேசிய துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ், ‘சித்தி’ என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தினார்.

அமெரிக்கர்களுக்கு இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று தெரியவில்லை என்பதால் உடனடியாக அவர்கள் கூகுளில் சித்தி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தேடி வருகின்றனர். ஒரே நாளில் கூகுளில் ஏராளமான நபர்கள் ‘சித்தி’ என்ற வார்த்தையை தேடி வந்ததால் கூகுளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கமலா ஹாரீஸின் சித்தி சென்னையில் இருக்கிறார் என்பதும் கமலா ஹாரிஸ் நான் எப்போது பார்க்க வேண்டும் என்று விரும்பினாலும் உடனே அவர் சென்னைக்கு வந்து விடுவார் என்றும் அவரது சித்தி அண்மையில் பேட்டி அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச எயிட்ஸ் தினம் இன்று!

‘எவர் கிவன்’ பயணத்தினை தொடங்கியது

நவால்னி சிறைச்சாலை மருத்துவமனைக்கு