உலகம்

அமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை

(UTV| கொழும்பு)- கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 இலட்சத்தை தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 1,713,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11,144,301 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100,030 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, உலகம் முழுவதும் 5,637,525 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,404,977 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 349,300 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

48 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள் : மலேசிய அரசு உத்தரவு

கொரோனா உயிரிழப்பு 42 ஆயிரத்தை தாண்டியது

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை – ஹமாஸ் தகவல்.