உலகம்

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 810 பேர் உயிரிழப்பு

(UTV|அமெரிக்கா) – கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் மெக்சிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 810 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, பாலைவனம், ஆறுகள் என பல்வேறு வழித்தடங்கள் வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகளாக நுழையும் முயற்சியில் 2019ஆம் ஆண்டு 810 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், 2014ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் இதுவரை 3,800 பேர் உயிரிழந்துள்ளதாக உலக அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தங்கள் நாடுகளில் நிலவும் வறுமை, வன்முறை மற்றும் போர் காரணமாக, மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கௌதமாலா மற்றும் எல்சால்வடார் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள், மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் இவ்வாறாக அகதிகளை மெக்சிகோ எல்லையில் பொலிஸார் தடுத்து நிறுத்தி தடுப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

ஆனாலும் அகதிகள் உயிரை பணையம் வைத்து ஆபத்தான ஆறுகள், மிகுந்த வெப்பமான பாலைவன நிலப்பரப்பு என பல்வேறு தடைகளை கடந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் அகதிகள் பலர் தோல்வியடைந்து தங்கள் உயிர்களையும் இழக்கின்றனர்.

Related posts

குடியரசுத் தலைவர் தொடர்ந்தும் கோமாவில்

இம்முறை 1300 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர்!!

இந்தியாவினால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்