வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவின் யு டியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

(UTV|AMERICA)-அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள சாப் புருனோ பகுதியில் யூ டியூப் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று அந்த அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் தங்களது இரு கைகளையும் உயர தூக்கியபடி வெளியே வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். யூ டியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அலுவலகத்தில் நுழைந்த பெண் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி, தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும், இந்த தாக்குததில், 3 பேர் படுகாயம் அடைந்து சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Kalu Ganga rising to flood level

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் : தொடரும் மழை

மனித உரிமை உயிர்ஸ்தானிகர் அதிருப்தி