வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவின் பாதீட்டிலும் சர்ச்சை

(UDHAYAM, WASHINGTON) – அமெரிக்காவின் 2018ம் ஆண்டுக்கான பாதீட்டில் பாதுகாப்புக்கான ஒதுக்கங்கள் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான தமது முன்வரைவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி பாதுகாப்பு ஒதுக்கங்கள் 54 பில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதில் வழமையான ஒதுக்கத்தைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமானதாகும்.

எவ்வாறாயினும் அவர் வெளிநாட்டு உதவிகளுக்கான ஒதுக்கங்கள் மற்றும் சுற்றாடல் துறை ஒதுக்கங்கள் என்வற்றை கனிசமாக குறைத்துள்ளார்.

குறிப்பாக சூழல்மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்த நம்பிக்கையற்றவராக டொனால்ட் ட்ரம்ப் விளங்குகிறார்.

இது தொடர்பில் அவர் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையிலேயே அவர் சுற்றாடல்துறைக்கான ஒதுக்கங்களையும் குறைத்துள்ளார்.

Related posts

மகிந்த ராஜபக்ஷவை மகிழ்ச்சியடைய வைத்துள்ள விடயம்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை

Twenty five year old sentenced to death over drugs