உலகம்

அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி அளித்தபோது, அனைத்து அமெரிக்கர்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் எங்களிடம் 600 மில்லியன் அளவுக்கு தடுப்பு மருந்து இருக்கும். இது ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு போதுமானது. குழந்தைகள் விரைவில் பள்ளிகளுக்கு திரும்ப நான் விரும்புகிறேன். அடுத்த கிறிஸ்துமசுக்குள் நாம் மிகவும் மாறுபட்ட (இயல்புநிலை) சூழ்நிலையில் இருப்போம்’ என்றார்.

இதற்கு முன்பு ஜோ பைடன், அனைவருக்கும் தடுப்பூசிகள் வசந்த காலத்துக்குள் கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தார். ஆனால், தடுப்பூசிகள் கிடைப்பது மற்றும் அவற்றை வினியோகிப்பதற்காக சிரமங்களை வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொடரும் ஆர்ப்பாட்டங்கள் – 35க்கும் அதிகமானவர்கள் பலி – ஊரடங்கை அறிவித்தது பங்களாதேஷ் அரசாங்கம்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு 60 கோடியை கடந்தது

பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர் – 5,000 யூரோக்கள் அபராதம்.