வகைப்படுத்தப்படாத

அமெரிக்கப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு

(UTV|AMERICA)  அமெரிக்காவில் டென்வர் பகுதியில் உள்ள  பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ள நிலையில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் கொலராடோவில் டென்வர் புறநகர் பகுதியில் ஸ்டெம் ஸ்கூல் ஹைலேண்ட் ரான்ச் என்ற பாடசலை உள்ளது. இங்கு அந்நாட்டு நேரப்படி நேற்று பகல் 2 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றிருக்கிறது.

மேற்படி இதில் காயமடைந்த 8 மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் அவர்களைப் கைது செய்துள்ளனர். இருவருமே அதே பாடசாலை மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

 

.

Related posts

மியன்மாரில் இடம்பெற்ற இனசுத்திகரிப்பு நடவடிக்கைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை –

ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிக்கு பூட்டு

ராணி பதவியை பாதுகாப்பற்றதாக உணரும் ஜப்பான் பட்டத்து இளவரசி