சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேரின் உத்தரவு செயற்படுத்தப்பட்டது

(UTV|COLOMBO)-மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேருக்கு கண்டி மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு இன்று தெல்தெனிய நீதவான் சானக கலன்சூரியவால் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி , ஒருவருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலும் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் , ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறும் சந்தேகநபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்டிருந்த மோசன் மனுவொன்றை ஆராய்ந்ததன் பின்னர் , கண்டி மேல்நீதிமன்றம் கடந்த தினம் இவர்களுக்கு பிணை வழங்கியிருந்தது.

குறித்த சந்தேகநபர்கள் கண்டி குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த 7 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவில் கிடைக்கப்பெற்ற முறைபாடுகளில் 48 மனுக்கள் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு

ரயன் வேன் ரோயன் உட்பட ஐவர் நாடு கடத்தப்பட்டனர்

மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில்