கேளிக்கை

அமிதாப் – அபிஷேக் பச்சனுக்கு கொரோனா

(UTV|இந்தியா) பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேபச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத்தொடர்ந்து அவர் மும்பை நானாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கும் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

Related posts

சர்கார் படத்துக்கு வந்த சோதனை

அபூர்வமான வெள்ளை நிற டொல்பினை பார்த்துள்ளீர்களா?..படுவைரலாகி வரும் வீடியோ

தம்பி படத்தில் பிரபுதேவா