கேளிக்கை

அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பு!!

(UDHAYAM, COLOMBO) – முண்டாசுப்பட்டி’ ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – அமலா பால் இணைந்து நடக்க உள்ள படத்திற்கு அசத்தலான தலைப்பை படக்குழு கைப்பற்றியுள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `மாவீரன் கிட்டு’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து விஷ்ணு, `கதாநாயகன்’, `சின்ட்ரல்லா’, `பொன் ஒன்று கண்டேன்’, `சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதேநேரத்தில் `முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் விரைவில் நடிக்க உள்ளார். `முண்டாசுப்பட்டி’ படத்தில் இணைந்த அதே கூட்டணி இப்படத்திலும் இணைய உள்ளது.

இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார். சஞ்சய், காளிவெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்திற்கு `மின்மிணி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. விஷ்ணு விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.

Related posts

‘BEAST’ படக்குழுவின் அடுத்த UPDATE

திருமண வரவேற்புக்கு வந்து வாழ்த்திய பிரதமர் மோடிக்கு பிரியங்கா சோப்ரா நன்றி

சிம்பு – ஓவியா இணையும்  படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு….