அரசியல்உள்நாடு

அப்போது நாங்கள் சண்டை பிடித்தோம் ஆனால் இப்போது நாம் இந்தியாவின் நண்பர்கள் என்கிறார் டில்வின் சில்வா!

தற்போதைய அரசாங்கம் நாட்டை இந்தியாவுக்கு காட்டிக் கொடுத்ததாகக் கூறும் எவரும் அதை நிரூபிக்குமாறு சவால் விடுப்பதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறுகிறார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்குச் சென்று இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும் அவரது அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்து இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பல ஒத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார்.

இலங்கை இந்தியாவுக்கு மொத்தமாக கொடுக்கப்படப் போவதனை மாற்றியது நாங்கள்தான் என்று அவர் கூறுகிறார்.

கடந்த காலத்தில் ஜே.வி.பி இந்தியாவுக்கு எதிராகப் போராடிய போதிலும், இப்போது இந்தியா மாறிவிட்டதால் கோபப்பட வேண்டிய அவசியமில்லை என்று கூறிய அவர், “ஒரு பிரச்சினை எழுந்துள்ளது” என்றும் கூறினார்.

நாங்கள் சண்டையிட்டோம். இப்போது அது முடிந்துவிட்டது. இப்போது நாம் நண்பர்களாக இருக்க வேண்டும். “அரசியல் என்பது இதுதான்” என்று அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பேரணியில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

Related posts

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் [UPDATE]

நுவன் சொய்சாவிற்கு ஐசிசி இனால்6 வருட கால தடை

கொரோனா : 8,000ஐ கடந்தது